Friday, April 11, 2014

இரட்டையர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத 5 உண்மைகள்!!!

Posted by K Venkatesh 7288 at 3:24 AM 0 comments

ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை ஐடென்டிக்கல் இரட்டையர்களாக இருக்க முடியுமா?


இதற்கான எளிமையான ஒற்றை வரி பதில் - ‘முடியாது' என்பதே. உண்மையில் பொதுமக்கள் "ஃப்ரட்டெர்னல்" அல்லது "ஐடென்டிக்கல்" என்ற சொற்களின் பிரயோகங்களைப் பற்றி தவறான புரிதலையே கொண்டிருக்கிறார்கள். இவை இரட்டைக் குழந்தைகள் உருவாகும் முறையை விளக்க உபயோகிக்கப்படுகிறதேயன்றி, அவர்களின் தோற்றத்தைப் பற்றி அல்ல. மோனோஸைகாட்டிக் (ஐடென்டிக்கல்) இரட்டையர்கள் ஒரே பாலினமாகவே இருப்பர். ஒரே ஸைகாட்டிலிருந்து ஐடென்டிக்கல் இரட்டையர்கள் உருவாகின்றனர். ஐடென்டிக்கல் இரட்டையர்கள் பெண் மற்றும் ஆணாக இருக்கலாமேயன்றி, ஆண் மற்றும் பெண்ணாக இருக்க முடியாது. அதே சமயம், ஃப்ரட்டெர்னல் இரட்டையர்கள் இரு வேறு விந்தணுக்களால் ஃபெர்ட்டிலைஸ் செய்யப்பட்ட இரு வேறு கருமுட்டைகளிலிருந்து உருவாகின்றனர். எனவே, ஃப்ரட்டெர்னல் இரட்டையர்கள் (fraternal twins) இரண்டு ஆண் குழந்தைகளாகவோ அல்லது இரண்டு பெண் குழந்தைகளாகவோ அல்லது ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை என்றோ இருக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

இரட்டையர்கள் வெவ்வேறு பிறந்த நாட்களைக் கொண்டிருக்க முடியுமா? 

இரட்டையர்கள் என்போர் ஒன்றாகப் பிறந்த குழந்தைகள் என்றே எண்ணப்படுகிறார்கள். ஆனால் மிகவும் அபூர்வமாக ஒரே நாளில் இரு குழந்தைகளும் பிறக்காமல், அடுத்தடுத்த நாளில் பிறந்தவர்களும் இருக்கின்றனர். பெரும்பாலும் நிமிட இடைவெளியுடன் பிறந்திருப்பவர்களே அதிகம். இதிலிருந்து என்ன தெரிகிறது, இரட்டையர்கள் வெவ்வேறு பிறந்த நாட்களையும் கொண்டிருக்க முடியும்.


இரட்டைக் குழந்தை பிறப்புக்கு ஏதேனும் மரபணு அல்லது பரம்பரை சார்ந்த தொடர்பிருக்குமா? 

தாயானவள் ஹைப்பர்-ஓவுலேசன் ஜீனை மரபு ரீதியாகப் பெற்றிருந்து, அதன் விளைவாக ஃப்ரட்டெர்னல் இரட்டையர்கள் (fraternal twins) பிறந்திருந்தால் மட்டுமே, அது மரபணு ரீதியிலானது என்று கருத முடியும். ஐடென்டிக்கல் (மோனோஸைகாட்) இரட்டையர்கள் உருவாவது தற்செயலானதேயன்றி, பரம்பரை குணம் அல்ல.

இரட்டையர்கள் தங்களுக்கு இடையே இரகசிய மொழியைக் கொண்டிருப்பரா?

 இரட்டையர்கள் தங்களுக்கிடையே ஒரு இரகசிய பாஷையைக் கொண்டிருப்பர் என்பது வெறும் கட்டுக்கதையே. க்ரிப்டோஃபேஸியா, ஆட்டோனாமஸ் லாங்க்வேஜ் அல்லது இடியோக்ளாஸியா போன்ற சொற்கள் இரட்டையர்களின் மொழியைக் குறிக்க உபயோகிக்கப்படும் சொற்களாகும். பொதுவாக குழந்தைகள் அடுத்தவரைப் பார்த்து சம்பந்தமில்லாத ஒலியெழுப்பி புரிந்து கொள்ள இயலாத மொழியில் பேசுவதைப் போலவே, இரட்டை குழந்தைகளும் பேசிக் கொள்ளும் மொழி தானே தவிர வேறொன்றுமில்லை. இவ்வாறு ஒலியெழுப்புவதன் மூலம் குழந்தைகள் தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தவும், தங்களின் மொழியை வளர்த்துக் கொள்ளவும் முற்படுகின்றன.

பல் முளைக்கும் பாப்பாவின் ஈறுகளைப் பாதுகாக்கும் டீத்தர்!

Posted by K Venkatesh 7288 at 3:13 AM 0 comments
 குழந்தைகள் என்றாலே ஆனந்தம் தான். அவர்கள் வளருவதை பார்ப்பது மேலும் ஆனந்தமூட்டும் அனுபவமாக உள்ளது. வளரும் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி படிக்கட்டும் சிறிது கடினமாகத்தான் இருக்கும். சில படிகள் மிகுந்த சவாலானதாக இருக்கும். இது போன்று சவாலான விஷயம் தான் குழந்தைகளுக்கு பல் முளைப்பதாகும். ADVERTISEMENT இந்த காலத்தில் அவர்களுக்கு மிகுந்த வேதனையும் அசௌகரியமும் ஏற்படும். பற்கள் முளைக்கும் காலம் உங்கள் குழந்தையின வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக விளங்குகின்றது. சில குழந்தைகள் பெரிய அளவில் எந்த பிரச்சனைகள் இல்லாமல் இந்த காலத்தை தாண்டி விடுகின்றனர். சிலர் மிகுந்த வேதனைக்கு ஆளாகின்றனர். இதனால் பெற்றோராகிய நீங்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவீர்கள். இந்தப் பகுதியில் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த சிரமத்திலிருந்து எவ்வாறு அவர்களை தப்புவிக்கலாம் என்பதை பற்றி பார்பபோம். இது மழலையருக்கும் மற்றும் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்ற அறிவுரைகளாகும். இந்த குறிப்புகளை கவனமாக படித்து பின்பற்றி பயனடையுங்கள்.

ஈறுகளை மசாஜ் செய்யுங்கள் 

 நமது விரல்களை கொண்டு அவர்களின் குழந்தைகளின் ஈறுகளை இதமாக மசாஜ் செய்தால் அவர்களுக்கு மிகவும் சுகமாக இருக்கும். இதை செய்வதற்கு நமது விரல்கள் மிகுந்த சுத்தத்துடன் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. நடக்க முயலும் குழந்தைகளுக்கும் இந்த முறையை நாம் செய்து பார்க்கலாம். மெதுவான அழுத்தங்கள் இதமூட்டுபவையாக இருக்கும். இதனால் அவர்களின் வலி குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

 குளிர்ந்த டீத்தர்

 டீத்தர் பொதுவாக பற்கள் வருமுன் உள்ள ஊறும் தன்மையை குறைக்க வல்லது. அதையே சிறிது நேரம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொடுப்பது குழந்தைக்கு இதமாக இருக்கும். அதன் கைபிடி பிடிப்பதற்கு இதமாக இருக்க வேண்டும். அதுவும் குளிர்ந்த நிலையில் இருந்தால் குழந்தைகளுக்கு கடினமாகிவிடும்.

 குளிர்ந்த தண்ணீர்

 நன்கு துவைத்து உலர்ந்த சுத்தமான துணி கொண்டு குளிர்ந்த தண்ணீரில் நனைத்து ஈறுகளில் ஒத்தடம் கொடுப்பதும் சிறந்த வழியாகும். இந்த குளிர்ந்த தன்மை குழந்தைக்கு மிகுந்த இதமான உணர்வை தரக்கூடியவை. 
 குளிர்ந்த உணவுகள் 
குளிர்ந்த உணவை கொடுப்பதும் ஒரு நல்ல இதமூட்டும் வழியாக உள்ளது. குளிரூட்டப்பட்ட உணவுகளை தவிர்த்து குளிர்ந்த உணவை கொடுப்பது சிறந்ததாகும். இதை திட உணவுகளை உண்ண தொடங்கிய குழந்தைகளுக்கு முதலில் கொடுக்க முடியும். 

வாயில் வைத்து கடிக்கும் விளையாட்டு பொருட்கள்

 கடைகளில் இத்தகைய பொருட்கள் நிறைய கிடைக்கின்றன. பொதுவாக மரக்கட்டையால் செய்த விளையாட்டுப் பொருட்களை கொடுப்பது பிளாஸ்டிக்கின் நச்சுத்தன்மை அவர்களை தாக்காமல் இருப்பதற்கு உதவும். இன்றைய காலத்தில் நச்சு இல்லாத பிளாஸ்டிக் பொருள்களும் கிடைக்கின்றன. இதை வாங்கி குழந்தைகள் கடிப்பதற்கு கொடுக்க முடியும். இது ஒரு எளிய மற்றும் சிறந்த வழியாக உள்ளது. 

ரப்பர் டீத்தர் 

குழந்தைகளுக்கு எப்போதும் அவர்களது விளையாட்டுச் சாதனங்களை கடிக்கும் பழக்கம் உண்டு. இந்நேரங்களில் டீத்தர் ஒரு விளையாட்டு பொருளாகவும் பற்களுக்கு சிறந்த இதமூட்டும் பொருளாகவும் இருக்கும். குளிரூட்டப்பட்ட பொருட்களை விட இதை கொடுப்பது பாதுகாப்பான மற்றும் இதமான கருவிகளாகின்றது. 

தண்ணீர் டீத்தர் 

 தண்ணீர் நிரம்பிய டீத்தர்கள் கடைகளில் கிடைக்கின்றன. இதை வாங்கினால் அவர்களின் ஈறுகளுக்கு ஏற்ப இதமாக மற்றும் மெலிதாக இருக்கும். இந்த வகையில் அதிரும் அல்லது வைபிரேடிங் டீத்தர் கூட கிடைக்கின்றது. 

மருந்து வகைகள் 

மிகுந்த வலி ஏற்படும் போது இந்த டீத்தர்கள் பலனளிக்காத தருணங்களில் மருத்துவர்களை அணுகி மருந்துகளை பெற்று அதை பயன்படுத்தி நிவாரணம் பெற முடியும். ஆனால் இதை செய்யும் முன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இரவில் குழந்தையை தூங்க வைக்க சில வழிகள்!!!

Posted by K Venkatesh 7288 at 3:05 AM 0 comments

ஒரே நேரத்தை பின்பற்றுங்கள் 

 குழந்தையை தினமும் ஒரே நேரத்தில் படுக்க வைக்க ஆரம்பிப்பதன் மூலம், அவர்களின் உயிரியல் உடல் கடிகாரமானது நாளடைவில் அதற்கேற்றாற் போல் மாறிவிடும். இப்படி ஒரு வாரத்திற்கு மேல் சிறிது கஷ்டப்பட்டு பின்பற்றி வந்தால், குழந்தைகள் தானாகவே அந்த நேரத்தில் உறங்கிவிடுவார்கள்.

இதமான சுற்றுச்சூழல் 

குழந்தை தூங்கும் போது, சுற்றுச்சூழலானது அமைதியாக, வெளிச்சமின்றி இருக்க வேண்டும். இதனால் குழந்தை விரைவில் தூங்கிவிடும்.

குழந்தையை அவர்களின் நிலைக்கு விடுங்கள்

 ஒவ்வொரு குழந்தையும் தூங்கும் போது, அவர்களுக்கு சுகமாக இருக்கும் நிலையில் தான் தூங்குவார்கள். ஆகவே அவர்கள் தூங்கும் போது, அவர்களின் கை மடங்கியிருந்தால், அதை எடுத்துவிட முயற்சிக்க வேண்டாம். இதனால் அவர்களின் தூக்கம் களைந்து, பின் அழ ஆரம்பிப்பார்கள்.


இரவில் தாய்ப்பால் உதவும் 

இரவில் குழந்தையை அழாமல் தூங்க வைக்க தாய்ப்பால் கொடுங்கள். மேலும் மருத்துவர்கள் கூட குழந்தைக்கு இரவில் தாய்ப்பால் அதிகம் கொடுங்கள் என்று பரிந்துரைக்கிறார்கள்

பகல் வேளையில் குழந்தையை விட்டுவிடுங்கள்

 பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தையை பகல் நேரத்தில் தூங்காமல் இருந்தால், அவர்கள் சோர்வடைவதுடன், இரவில் தூங்கிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் குழந்தைகள் எப்போதுமே மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். ஆகவே எப்போது அவர்களை தூங்க வைத்தாலும் இரவிலும் அவர்கள் தூங்கமாட்டார்கள். ஆகவே அவர்களது போக்கில் விடுங்கள்.


இரவில் குளிப்பாட்டவும் 

குழந்தைகளை இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டினால், அவர்களது உடலானது சோர்வடைந்துவிடும். இதனால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறுவார்கள்.
மென்மையான இசை குழந்தைக்கு தாலாட்டு அல்லது மென்மையான இசையை போட்டுவிடுங்கள். இதனால் அவர்கள் அந்த இசையை கவனித்தவாறு தூங்கிவிடுவார்கள்.

அரவணைப்புடன் இருங்கள்

 குழந்தையை தூங்க வைக்க வேண்டுமானால், அவர்களை அரவணைத்தவாறு இருங்கள். இதனால் குழந்தை தன் தாயின் அரவணைப்பால் எந்த ஒரு பயமின்றி நிம்மதியாக தூங்கும்.

மென்மையான வலை 

 குழந்தையை மென்மையான படுக்கை விரிப்பில் படுக்க வைத்து, அவர்களைச் சுற்றி மென்மையான தலையணையை வைத்து படுக்க வைத்தால், அவர்கள் சுகமான தூக்கத்தை மேற்கொள்வார்கள்.

மலங்கழிப்பது 

குழந்தையை தூங்கு வைப்பதற்கு முன்பே, அவர்களை மலங்கழிக்குமாறு பழக்கப்படுத்துங்கள். இதனால் அவர்கள் தூங்கும் போது நிம்மதியாக தூங்குவார்கள்.

 

BABIES SMILEY Template by Ipietoon Blogger Template | Gift Idea