Saturday, December 3, 2016

குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க

Posted by K Venkatesh 7288 at 2:31 AM
குழந்தையின் உடல் எடை அதிகரிக்க வழிகள் பல உள்ளன. இயற்கையான உணவூட்டல் முறையில் குழந்தைகளின் எடையை அதிகரிக்க முடியும். சரியாக உடல்நலன் பேணப்படும் குழந்தைகள், தேவையான உடல் எடையை பெறுகின்றனர். இதற்கு குழந்தைகளின் உடல் நலன் பேண சிறந்த வழிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகிறது.

குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க முறைப்படுத்தப்பட்ட சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளில் குழந்தைகளுக்கு தேவையான போஷாக்கு இருக்கிறதா என்பதை கவனித்து கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் மிகுந்த இயற்கையான உணவினை அவர்களுக்கு வழங்கும்போது அதன் பயனாக குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் உடல் எடை சீராக அதிகரிக்கிறது.

குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க செய்யும் உணவுகள்:

குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க கீழ்கண்ட உணவுகள் பயன்படுகின்றன.

1. பால் மற்றும் பால்பொருட்கள்:

இயற்கையிலேயே பால் ஒரு சிறந்த உணவுப்பொருள். இதில் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது. குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் உதவுகிறது.

2. கோழி முட்டை

முட்டையில் குழந்தைகளின் வளர்ச்சித் தேவையான புரோட்டின் சத்து உள்ளது. அன்றாடம் ஒரு முட்டையை அவித்து குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் நல்ல உடல் எடை அதிகரிக்கிறது.

3. இறைச்சி

இறைச்சியில் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துகளும் உள்ளது. புரோட்டின், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது.

4. இயற்கையான இனிப்புகள்

இயற்கையில் கிடைக்கும் பழவகைகளில் கிடைக்கும் இனிப்பு பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அளவாக கொடுக்கும் பழ ரசங்கள் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.

5. பாஸ்தா மற்றும் ஆலிவ்

பாஸ்தா மற்றும் ஆலிவ் எண்ணெய் மூலம் செய்யப்படும் உணவுப் பொருள் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களை கொடுப்பதோடு, உடல் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.

0 comments:

Post a Comment

 

BABIES SMILEY Template by Ipietoon Blogger Template | Gift Idea