வயிற்றுபூச்சி நீங்க
1. குழந்தைகளுக்கு வேப்பம்பூ கசாயம் கொடுத்து வர வயிற்றுப்பூச்சி
நீங்கும்.
2. மூன்று வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு வேப்பங்கொழுந்துடன்
மஞ்சளை அரைத்து கொடுக்க வயிற்றுப்பூச்சி நீங்கும்.
சளி
1. துளசி இலையை நீரில் ஊற வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வர
நினைவாற்றல் அதிகரிக்கும், சளி பிரச்சனை நீங்கும்.
மலச்சிக்கல்
1. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் காய்ந்த திராட்சையை
வெதுவெதுப்பான சுடு நீரில் ஊற வைத்து, கசக்கி சாறை மட்டும்
வடிகட்டி கொடுக்கவும்.
2. கீரைவகைகள், பீன்ஸ், வாழைத்தண்டு போன்றவற்றில் நார்ச்சத்து
அதிகம் உள்ளது .இவற்றை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம்
மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கலாம்.
இரும்புச்சத்து
1. பேரிச்சைப் பழத்தை சுடு தண்ணீயில் ஊற வைத்து விதைகளை நீக்கி
விட்டு மிக்ஸியில் அடித்து சாறை மட்டும் வடிகட்டி கொடுக்கவும்.
குழந்தைகள் பேரிச்சை அதிகம் சாப்பிடுவதன் மூலம் இரும்பு சத்து
அதிகமாக கிடைக்கும்.
2. வெல்லம், முறுங்ககீரை, வேர்கடலை, பொட்டுக்கடலை போன்றவற்றில்
இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
பற்கள் வலிமை பெற
1. குழந்தைகளுக்கு கேரட்டை பச்சையாக சாப்பிட கொடுக்க பற்கள் வலுபெறும்.

0 comments:
Post a Comment